Friday, November 3, 2017

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு
- ஆசான் கொங்கணச்சித்தர்

தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது.

'சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்''
"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்''

"சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே"

எனப் பலர் சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள்.

சாதிப்பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்மை இல்லை என்றார்கள். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து சித்தர்கள் குரல் எழுப்பினர்.

"தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்;
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்"
என்பார் ஆசான் அகத்தியர்.

'மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே;
பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே'
என்பது ஆசான் நக்கீரர் கூற்று.

பறைச்சியாவது ஏதடா?
பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும்
இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ
பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும்
பகுத்துபாரும் உம்முளே!
வாயிலே குடித்தநீரை
எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத
மெனப்படக் கடவதோ?
வாயில் எச்சில் போகஎன்று
நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம்
வந்திருந்து சொல்லுமே!
- ஆசான் சிவவாக்கியர்

https://www.facebook.com/groups/siddhar.science

நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 
bbb3


Thursday, October 19, 2017

பழனி முருகன் கோவில் - போகர் வரலாறு

பழனி முருகன் கோவில் - போகர் வரலாறு, சிலையின் விஞ்ஞான சோதனை வியப்பூட்டும் முழு தகவல்


Friday, October 13, 2017

காலம் வென்ற காளமேகப் புலவர்..காலம் வென்ற #காளமேகப் புலவர்..
ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”
“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேகம்.
https://www.facebook.com/groups/siddhar.science
”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?
அதைத் தகும் என்றும், முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்....இப்படி .....
" செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே "
https://www.facebook.com/groups/siddhar.science
செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படிப் போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.
விளக்குமாறு என்பதற்கு விளக்கம் , சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?
இப்படிச் செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 
bbb3Wednesday, October 11, 2017

கலியுகம் பற்றி ஆசான் கோரக்கர்..!சந்திரரேகை 200 என்ற நூலில் ஆசான் போகரின் சீடரான ஆசான் கோரக்கர்..!
கலியுகம் பற்றி ஆசான் கோரக்கர்..!
https://www.facebook.com/groups/siddhar.science

யோகி பரமானந்த
கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத
பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள்
பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள்
குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும்
முறைமை கெட்ட
மூதரிய தாயினையே
சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது
பயில்வார் பங்கில்
பூவலகிற் கலியுனுட
பான்மை கேளே
– ஆசான் கோரக்கர்

உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.
https://www.facebook.com/groups/siddhar.science

கேளே நன்மனுக்கள்
நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல்
அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும்
வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும்
உயரங்கட்டை
வாளே முன் பின்
வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு
மிடத்தைத் தென்பா
சூளே மெய்ச் சும்பலப் பட்டன்
வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின்கீழ்க்
கலி செனிப்பே
– ஆசான் கோரக்கர்

இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள். மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.

கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.

கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.
https://www.facebook.com/groups/siddhar.science

கலியான ஆண்டு
ஐயா யிரம்பின்
கருத்துடனே
சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐ
யாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட
மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந்
திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின்
கொட்டம் போகும்
வலியுடனே சத்தியத்தான்
நிலையே யோங்கி
வழுவாது மனுக்கள்
ஞானி யாமே.
— ஆசான் கோரக்கர்

கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

தான தரும தத்துவ
யோகம் அதிகம் ஆகும்
தாரணியில் மாந்தர்
பல வருண மாவர்
ஈனமின்றி யோக ச
க்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென்
பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு
வசிப்பார் நாடு
முகமினிய நவரத் தின
விளைவுண் டாகும்
போனகமாய்க் குளிகையிட்டுப்
பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று
வாழ்கு வாரே.
— ஆசான் கோரக்கர்

இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.
https://www.facebook.com/groups/siddhar.science

அந்தநாள் அக்காலம்
நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள்
அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல்
சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந்
தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம்
ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம்
வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு
மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால்
மாள்வார் கதிரே.
— ஆசான் கோரக்கர்

கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.

கதிரவணுங் கடும்பனியுங்
காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு
ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட
மண்டை போல
மகாரூப ரூப வெளி
மதி மேற் காணும்
துதியாக நாழி இரு
இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான்
மூன்று மட்டும்
சதியாக வடதேசம்
தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த
மழையுடண் டங்கே.
— ஆசான் கோரக்கர்

கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
https://www.facebook.com/groups/siddhar.science

எங்கெங்கும் சாதுக்கள்
ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய்
எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை
பாத கன்றான்
பக்தர்களை சிறை
கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே
பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல்
மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர்
சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென்
றறைந்து போனார்.
-— ஆசான் கோரக்கர்

எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.

சந்திரரேகை 200 என்ற நூலில் ஆசான் போகரின் சீடரான ஆசான் கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்.

https://www.facebook.com/groups/siddhar.science
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 
bbb3


Friday, October 6, 2017

தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது
வெறும் பூஜையால் / தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது, முருகனைப் பூஜித்து ஆசி பெற்றதால் வந்த பூஜை பலத்தின் உதவியால் புண்ணியங்களைச் செய்ய முருகனது அருளைப் பெற வேண்டும்.
https://www.facebook.com/groups/ongarakudil

ஞானவழிதனிலே வருகின்றவர்க்கு கொடுக்கப்பட்ட அறிவு, கல்வி, பெற்றதேகம், செல்வம், வாய்ப்புகள், தக்க துணைகள் என அனைத்தும் உலக நன்மைக்கு பயன்படுத்த கொடுக்கப்பட்டதே தவிர தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு பயன்படுத்த அல்ல என்பதை புரிந்து கொள்வதோடு, பிறவியின் நோக்கம், உலகநலன் காப்பதும், தர்மத்தை காப்பதும், இனி பிறவா நிலை அடைவதும் என்பதை அறிந்து கொள்வதோடு பந்தபாசத்தினை, இல்லறத்தினை ஒரு எல்லையில் வைத்து பழகும் சிறப்பறிவையும் பெறுவான்.

உலகியல் தொடர்புகளை தனது தவ வாழ்விற்கு பயன்படுத்திக் கொள்வானே தவிர அவற்றிற்கு அடிமையாக மாட்டான், இறைவனது திருவடிக்கே கொத்தடிமையாகி தவமியற்றி பெறுதற்கரிய பெரும்பேறான பிறவாநிலையையும் அடைவான்.

உலகியல் சார்பு இல்லாமல் தவமியற்றல் இயலாது. ஆதலினாலே உலகியல் வாழ்வினிலே அவசியம் இருப்பதோடு அந்த உலகியல் வாழ்வின் மீது நாட்டம் கொள்ளாமல் இறைவனது திருவடிகளிலேயே நாட்டமாய் இருப்பார்கள்.

ஆதலின் உலகமாற்றம் நிகழ்த்திட முருகன் அருளை பெறுபவன், உலகியல் வாழ்வினை வெறுக்கவும் மாட்டான், விரும்பவும், மாட்டான். தனக்கு ஏற்பட்ட கடமையை செவ்வனே செய்வான்.

இவனே உலகமாற்றத்திற்கான உத்தம தொண்டன் என்பதையும் தெளிந்து முருகனது நாமங்களை மறவாமல் சொல்ல சொல்ல உலகமாற்றம் நிகழ்த்தும் வல்லமையையும் பெறலாம்.
https://www.facebook.com/groups/ongarakudil

முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் அவன் ஜீவ தயவு உடையோராய் இருத்தல் அவசியம் ஆகிறது. ஜீவதயவை பெற வேண்டுமாயின் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் தவறாது முருகனை பூஜிக்க வேண்டும்.

உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டு பூஜை செய்ய செய்ய பரோபகாரம் பெருகி உலக உயிர்களும் தம்மைப் போலத்தான் என்பதை அறியும் அறிவை பெறலாம். உலக உயிர்கள் படும் துன்பம் கண்டு இரங்கி உலக உயிர்களுக்கு குறிப்பாக மேம்பட்ட பிறப்பாகிய மனிதர்களுக்கு உண்டான பசியை போக்க முயற்சிப்பதை முதல் கடமையாக கொள்ள வேண்டும்.

ஆதலின் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை கடமையாகக் கொண்டு பசியாற்றுதலாகிய மிக உயர்ந்த பரோபகார செயலை செய்திடல் அவசியமாகும் என்பதை உணரலாம்.

-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
https://www.facebook.com/groups/ongarakudil

நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 
bbb3


Friday, September 22, 2017

சாகாதவனே சன்மார்க்கி!சாகாதவனே சன்மார்க்கி!
சாகாதவனே சற்குரு!
சாகாதவனே முற்றுப்பெற்ற சித்தன்!

உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்
-ஆசான் சிவவாக்கியர்

இடது, வலது மூச்சுத் (மூக்கு) துவாரங்கள் ஊடாக ஓடும் காற்றை(வாயுவை) கபாலத்திலுள்ள சுழிமுனையில் (உருத்தரித்த நாடி) ஓடுங்கினால், வயோதிபரும்(விருத்தர்) பாலகராக மாறி, மேனியும் பளபளப்பாக ஒளிதேகம் பெற்று சிவந்திடும்.

வயது முதிர்ந்த கிழவரும் ஞானபண்டிதனான முருகப்பெருமான் துணைகொண்டு சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை சுழிமுனையாகிய 'உருத்தரித்த நாடி'யில் ரேசித்துப் பூரித்துக் கும்பித்து நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என்கிறார் ஆசான் சிவவாக்கியர். இவ்வாறு நம் உடலாகிய ஆலயத்தைப் பற்றி சித்தர்கள் கண்ட பல உண்மைகள் இன்னும் ஆராயப்படாமல் காத்துக் கிடக்கின்றன.

முருகப்பெருமானே இவ்வுலகில் முதன்முறையாக ஞானம் அடைந்தவர். 9 கோடி ஞானியர்க்கும் ஞானம் அதாவது மரணமில்லா பெருவாழ்வு அளித்தவர். முருகப்பெருமானையும் அவர்வழி வந்த முற்றுப்பெற்ற சித்தபெருமக்களையும் போற்றி, அவர்கள் அளித்த உபதேசங்களைக் கடைப்பிடித்தால் பெறுதற்கரிய மானிடப்பிறப்பைப் பெற்றவர் பிறவிப்பிணியை வென்று மரணமிலாப் பெருவாழ்வு பெற்று இறையுடன் இரண்டறக் கலந்து இறைபதமடையலாம்.

ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா


சித்தர் அறிவியல் Wisdom of Siththars


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3