Wednesday, June 21, 2017

வீடுபேறடைதல்...




கடவுள் கோவில்களில் கல்லாக வாழ்வதில்லை. கடவுள் சீவர்களின் ஆத்மாக்களில் சோதியாக வாழ்கிறார். கோவிலுக்குப் போங்கள். ஆனால், மெய்ப்பொருள் அறிந்து போங்கள். முதலில் தானம் அதன் பின்பே தவம் அல்லது வழிபாடு. பிற உயிர்கள் மீது அன்பில்லாதோர் இறையன்பைப் பெறமாட்டார் என்பது முற்றுப்பெற்ற சித்தர்களின் சத்தியவாக்காகும்.

"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று 

சொல்லு மந்திரம் ஏதடா..?!
நட்டகல்லும் பேசுமோ ..?!
நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ...?!"

- ஆசான் சிவவாக்கியார்

"தானமும் தவமும்
தான் செய்வராயின்
வானவர் நாடுவழி
திறந்திடுமே."

-ஆசான் ஔவையார்

"தானம் தவம் இரண்டும்
தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்"

-ஆசான் திருவள்ளுவர்

'உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு
வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச்
சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்கே'

-ஆசான் திருமூலர்

"ஆர்க்கும் இடுமின்
அவர் இவர் என்னன் மின்
பார்த்து இருந்து உண்மின்
பழம்பொருள் போற்றன் மின்
வேட்கை உடையீர்
விரைந்து ஒல்லை
உண்ணன்மின்
காக்கை கரைந்து
உண்ணும் காலம் அறிமினே".

-ஆசான் திருமூலர்

. . . . .  நன்றி 
 Aum Muruga ஓம் முருகா 
Nàthàn கண்ணன் Suryà
06/05/2016


No comments:

Post a Comment