Tuesday, July 25, 2017

கண்ணீர் அஞ்சலி: பாடகர் திரு.ராஜராஜசோழன்


கண்ணீர் அஞ்சலி!!!


சிம்மக் குரலோன், உலகமெங்கும் சீர்காழி புகழ் பாடி எண்ணற்ற ரசிகர்களின் இதையத்தை ஆட்கொண்ட மலேசிய சீர்காழி புகழ் திரு. ராஜராஜசோழன் இறைவனடி சேர்ந்தார். 


அன்னாரின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னார் இறைநிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

ஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை.




ஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை.


நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய எதையும் நாமும் எளிதாக உதாசீனம் செய்துவிடுவோம் என்று கூறுவார்கள். இந்த கருத்தை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நம்மில் பலர் திருவாசகத்தை படிப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. அனால் ஜெர்மனியை சேர்ந்து தம்பதியினர் திருவாசகம் கேட்டதால் அவர்கள் வாழ்வில் மிக பெரிய அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வாருங்க இதை பற்றி விரிவாக பார்ப்போம்.


ஜெர்மனியை சேர்ந்த கர்ப்பணிப் பெண் ஒருவர் நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால் பெர்லின் மருத்தவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம்
பரிசோதனை செய்துள்ளார்.
அவரும் பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப்பார்த்து “குழந்தை அசைவின்றி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது ” என்று கூறி அனுப்பிவிட்டார்.
என்ன செயவதென்று புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராக பார்த்துள்ளனர் அனால் அனைவரும் ஒரே விதமான பதிலையே கூறியுள்ளனர்.
இந்நிலையில் அப்பெண்ணும் அவர் கணவரும்  மன நிம்மதிக்காக இளையராஜாவின் திருவாசகம் இசையைக் கேட்டுள்ளனர்.
என்ன ஆச்சரியம்! “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகாதார்” என்ற சான்றோர் வார்த்தைக்கு இணங்க சிலநிமடங்களில் வயிற்றில் அசைவு தெரிய மகிழ்ச்சியில் இசையை நிறுத்தி உள்ளனர். உடனே குழந்தையின் அசைவும் நின்றுள்ளது.
தொடர்ந்து நான்கு முறை இப்படி போட்டு போட்டு நிறுத்தியுள்ளனர். குழந்தையும் அதற்கு ஏற்றார் போல் அசைவை நிறுத்தியுள்ளது. அதன்பின் தொடர்ந்து வீடு முழுவதும் ராஜாவின் இசைதான் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. சரியாக பத்தாவது மாதத்தில் அறுவை சிகிச்சை இன்றி குழந்தை ஆரோக்கியமாக பிறந்து மருத்துவர்களை விய்ப்பில் ஆழ்த்தியது.
அந்த ஜெர்மன் தம்பதியர் சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். இளையராஜாவும் குழந்தைக்கு ஆசி வழங்கியுள்ளார் . தற்போது ஜெர்மனியை சார்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த இசையில் உள்ள அற்புதத்தை ஒப்புக்கொண்டுள்ளதோடு மட்டும் இல்லாமல் ராஜாவின் திருவாசகம சி டி யைக்கேட்டு அந்த இசைக்கட்டுமானத்தில் வியந்து போயுள்ளனர்.
அத்துடன் மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர்.
இப்படி பட்ட பல அதிசயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் நாம் நம் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. உதாரணத்திற்கு நாம் போகர் சித்தர் கூறிய அரும்பெரும் மருத்துவ குறிப்புகளை ஓரங்கட்டிவிட்டோம். ஆனால் வெளிநாட்டவரோ அந்த குறிப்புகளை வைத்து மருத்துவ துறையில் சாதனைகள் பல படைத்தது வருகின்றனர்.


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 

Monday, July 24, 2017

அகத்தியம்


#அகத்தியம்: ஆசான் #அகத்தியர்

அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. ஆசான் அகத்தியர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன . இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.

ஆசான் அகத்தியரின் மாணவர்கள்:

செம்பூண்சேய்
வையாபிகன்
அதங்கோட்டாசான்
அபிநயனன்
காக்கை பாடினி
தொல்காப்பியர்
பனம்பாரனார்
கழாகரம்பர்
நத்தத்தன்
வாமனன்
துராலிங்கன்

மற்றும் எண்ணிலிச் சித்தபெருமக்கள் அவருடைய சீடர்களாக உள்ளனர். எதிர்காலத்திலும் இன்னும் பலர் சீடராவர். அகத்தீசரே ஞானபண்டிதரான முருகப்பெருமானின் முதற் சீடராவர்

ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி
. . ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
 Aum Muruga ஓம் முருகா 

நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

Saturday, July 22, 2017

மனஅமைதிக்கு கேட்டு இன்புறுங்கள் சிவவாக்கியர் பாடல்

சிவ வாக்கியம் பாடல் | கொஞ்சும் தமிழில் மனதை மயக்கும் இனிய கானம்


அருமையான சிவவாக்கியர் பாடல், மனஅமைதிக்கு , கேட்டு இன்புறுங்கள் 

அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆரிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்


ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

bbb3

Friday, July 21, 2017

பட்டினத்தார் பாடல்

"ஊருஞ் சதமல்ல 
உற்றார் சதமல்ல 
உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல 
பெண்டிர் சதமல்ல 

பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல
செல்வஞ் சதமல்ல
தேசத்திலே
யாருஞ் சதமல்ல
நின்றாள்
சதங்கச்சி ஏகம்பனே."


"நாறுமுடலை,
நரிப்பொதி சோற்றினை,
நான்தினமுஞ்
சோறுங் கறியும்
நிரப்பிய பாண்டத்தைத்
தோகையர்தம்
கூறும்மலமும்
இரத்தமுஞ் சோருங்
குழியில்விழாது
ஏறும் படியருள்வாய்
இறைவா..!"

- ஆசான் பட்டினத்தார்
ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3




Thursday, July 20, 2017

ஓங்காரக்குடிலில் ஓர் அட்சயப்பாத்திரம்.


40+ ஆண்டுகளில் கோடிக் கணக்கானோர்க்கு
அன்னதானம், இலவசக்குடிநீர், மருத்துவம்...
ஓங்காரக்குடிலில் ஓர் அட்சயப் பாத்திரம்.


துறையூர் - இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சிறு ஊர். இதற்குமுன் வறட்சி மிகுந்ததாக, இயற்கை வளம் குன்றியிருந்த இந்த ஊர் இப்போது பசுமைப் போர்வை போர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்குக் காரணம், துறையூரில் அமைந்திருக்கும் ஓங்காரக் குடில்தான்! தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகளின் அரிய முயற்சியால் உருவானதுதான் ஓங்காரக் குடில். ‘நல்லார் ஒருவர் உளரேல்’ என்ற வாக்கியப்படி, அந்தப் பகுதியின் வறட்சியைப் போக்கி நீர்வளம் மிக்கதாக ஆக்கியவர் சுவாமிகள்தான். வடலூரிலுள்ள வள்ளலார் திருக்கோயி லில் நிரந்தரமாக ஒளிரும் தீபத்திலிருந்து ஒரு பொறியை எடுத்துவந்து இங்கே ஓங்காரக்குடிலில் தீபமாக ஏற்றி வைத்து, வடலூர் போலவே அனைத்து ஆன்மிக நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கிறார்கள். திருச்சி, துறையூரிலிருக்கும் இந்த ஓங்காரக் குடிலில், சுவாமிகள் தலைமையில், சமீபத்தில் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

24.01.2016 அன்று காலை 6.30 மணியளவில் சரவணஜோதி தரிசனமும் தொடர்ந்து மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் வகுத்த அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும் நடைபெற்றன. காலை 9 மணியளவில் குருநாதர் அன்பர்களுக்கும் பொது மக்களுக்கும் அருளாசி வழங்கினார். காலை 10 மணியளவில், பருவ மழை பெய்து நாடு செழித்திட வேண்டி முதுபெரும் தலைவன் முருகப்பெருமான், மகான் அகத்தியர், மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மற்றும் நவகோடி சித்தர்களை வணங்கும் சித்தர்கள் வழிபாடு நடைபெற்றது. பிறகு அன்பர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் சிறப்பு அருளுரை வழங்கினார்கள். சித்திரா பௌர்ணமி, அகத்தியர் சித்தி தினம் ஆகியவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் இத்தலத்தில் சமீபத்திய தைப்பூசத் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து குழுமிவிட்டார்கள். சிங்கப்பூர், லண்டனிலிருந்தெல்லாம் வந்திருந்து ஆர்வத்துடன் விழா நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டார்கள். மலேசியாவிலிருந்து மட்டும் 200 பேர் வந்திருந்தார்கள் என்றால், இத்தலத்தின் மேன்மை புரியும்.

பசிப்பிணி போக்கும் அட்சயப் பாத்திரமாகவே இந்த அற்புதத் தலம் விளங்குகிறது என்றால் மிகையில்லை. ஆமாம், காலை, மதிய வேளைகளில் தினமும் சுமார் 25,000 பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது - முழு சாப்பாடு! இதுதவிர, சுற்றியுள்ள ஏழு கிராமங்களைத் தத்தெடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு கிராமத்துக்கு சுடச்சுட அன்னதானம் அளிக்கப்படுகிறது. ‘மிச்சமில்லை, எச்சமில்லை’ என்பது இந்த அன்னதானத்தில் தாரக மந்திரமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, தயாரிக்கப்பட்ட அன்னம் அனைவருக்கும் மிச்சமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதேபோல உணவு பெற்றவர் சிறிதளவேனும் எச்சம் (மீதம்) வைத்தால், அவையும் வாயில்லா ஜீவன்களுக்கு ஆகாரமாகிறது. அதேபோல டன் கணக்கில் தயாராகும் சாதம் வடிக்கப்பட்டு அந்த உலைநீர் ஒரு கால்வாய் வழியாக வெளியே விடப்படுகிறது. இந்த நீர் பக்கெட்டுகளில் சேகரிக்கப்பட்டு பசு முதலான கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அடுப்பெரிக்க விறகு பயன்பட்டுவந்தது; இப்போது முற்றிலும் எரிவாயுதான். எச்சில்பட்ட பாத்திரங்களைப் படுசுத்தமாகக் கழுவி எடுக்க ‘டிஷ் வாஷர்’ இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சமையலறையும் சுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழ்கிறது. குடிலின் ஆதரவில் இதுவரை 18,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் நலிந்த பலர் இந்த உதவியால் கண்ணொளி பெற்று உலகைப் பளிச்சென்று பார்த்து மகிழ்கிறார்கள். இங்கே மிகவும் எளிய முறையில் திருமணமும் நடத்திவைக்கப்படுகிறது. ஆமாம், மொத்தத்தில் பத்தே நிமிஷம்தான்! மணமகன்-மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் வலதுகை மணிக்கட்டில் காப்பு கட்டிக்கொள்கிறார்கள். ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி’ என்று வள்ளலார் மந்திரம் சொல்கிறார்கள்.

பிறகு மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுகிறார். இருவரும் தத்தமது பெற்றோருக்கு பாதபூஜை செய்கிறார்கள். பிறகு சுவாமிகளிடம் சென்று ஆசி பெறுகிறார்கள். அவ்வளவு தான்! இந்தவகையில் இதுவரை சுமார் 3000 திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக மடாதிபதிகளோ, ஓர் ஆன்மிக அமைப்பின் தலைவரான சுவாமிகளோ தன்னை வணங்கி ஆசிபெற வருபவர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், புஷ்பம் அல்லது பழம் என்று தமது ஆசியுடன் அளிப்பார்கள். ஆனால், தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளோ அனைவருக்கும் சாக்லெட் அளிக்கிறார் - வாழ்க்கை இனிப்பாகவும், சுவையாகவும் (அந்த சாக்லெட் காகிதத்தைப் பிரிப்பதுபோன்ற சிறு பிரச்னை வந்தாலும், அதுவும் தன் அருளால் சீராகி) அமையவேண்டும் என்ற தன்னுடைய உளமார்ந்த அருளாசியுடன்!

நன்றி தினகரன் 25/02/16
- குடந்தை நடேசன்
ஓங்காரக்குடில் Ongarakudil
https://www.facebook.com/groups/ongarakudil
Aum Muruga ஓம் மு௫கா






நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3



Wednesday, July 19, 2017

கைபிடி அன்னம், முன்னம் வினை எரிக்கும்

'ஏய் உனக்கென்ன குறைச்சல், கையும் காலும் நல்லாத்தானே இருக்கு'' என்ற வசை காதில் கேட்காத நாள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் தாங்க முடியாத அளவு தொல்லையாகவே இருக்கிறது. என்றாலும், பொறுமையாகவே இருந்துவிடுவேன். ஏன் இவர்கள் வேலைக்கு போவதில்லை ? யோசித்துப் பார்த்தால், அது அவர்கள் வினையின் பலன் என்றே கூறலாம். வேலை செய்ய வாய்ப்பு இருந்தும், உடலில் தெம்பு இருந்தும் மான, அவமானங்களைக் கருத்தில் கொள்ளாது பிச்சை எடுப்பவர்களைக் கண்டால் நான் இவ்வாறே நினைத்துக் கொள்வேன். உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு தவறாமல் என்னால் முடிந்த உதவிகயைச் செய்வேன். மற்றவர்களுக்கு முடிந்தால் செய்வேன்.






இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் என் குரு நாதர் சொல்வார், உலகில் எந்த காரியத்தைச் செய்தாலும் அது இரண்டு விளைவுகளை உண்டு பண்ணும். அது இயற்கையின் நீதி. ஆனால், எதிர் விளைவே ஏற்படுத்தாத ஒரே காரியம் தருமம் மட்டுமே. தருபவருக்கும், பெறுபவருக்கும் பாவம் தீரும். அதாவது ''நீ செய்த பாவத்துக்கு பிச்சையெடுப்பாய்'' என்று சொல்லக் கேட்கிறோம் அல்லவா ? அதுதான், பிச்சை எடுப்பதால் அவர் பாவம் குறைகிறது. தருபவருக்கு தருமம் செய்வதால் பாவம் குறைந்து விடுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் நம் பாவம் தீர பிச்சை எடுப்பவர் உதவுகிறார். அதற்கு நாம் அவருக்குக் கடமைப்படுகிறோம். சிலர் தத்துவமாக நாம் பிச்சையிடுவதால் அவர்களை சோம்பேறியாக மாற்றுகிறோம் என்பார்கள். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் கூட சில சூழ்நிலைகளில் பிச்சை எடுக்க நேரிடும். நான் ஒரு முறை அப்படி மாட்டிக் கொண்டு பிறரிடம் உதவி கேட்டு(பிச்சையெடுத்து) பயன் அடைந்திருக்கிறேன். ஒருவரிடம் கையேந்தி கடன் வாங்கிவிட்டு கொடுக்காமல் இருப்பது கூட பிச்சைதான். நம்மில் பலர் இந்தத் தவறைச் செய்கிறோம். எல்லா வகையிலும் தருமம் உயர்வானது என்றாலும், பசிக்கு உணவிடுவது மிகப் பெரிய தருமமாகும்.






நாம் கோவிலில் பிரசாதம் என்று பெற்றுக் கொள்வது கூட ஒரு தரும காரியமே. தன் பாவம் தீர ஒருவர் தெய்வத்தின் முன்னிலையில் நமக்கு அதைத் தருகிறார். அது அவருக்கும், பெற்றுக் கொள்ளும் நமக்கும் பாவத்தைக் குறைக்கும். ஆனால் நமக்கு வீட்டில் உணவு இருக்கும் போது நிறைய ஏழைகளின் வரிசையில் நின்று அவர்கள் உணவை பங்கிட்டுக் கொள்வது முறையாகாது. அன்னதானத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்றால், கலியுகத்தில் மனிதனின் பாவத்தை போக்கும் சிறப்பு அன்னதானத்திற்கு உண்டு(பசித்தவர்களுக்கு உணவிடுதல்).
கிருதயுகத்திலே உயிர் எலும்பைப் பற்றிக் கொண்டிருக்கும்.
திரேதாயுகத்திலே உயிர் நரம்பைப் பற்றிக் கொண்டிருக்கும்.
துவாபரயுகத்திலே உயிர் உதிரத்தைப் பற்றிக் கொண்டிருக்கும்.
கலியுகத்திலே உயிர் அன்னத்தைப் பற்றிக் கொண்டிருக்கும்.

என்பது சான்றோர் வாக்கு.








அந்த அடிப்படையில் அன்னதானம் செய்வது நம்மைக் கலியுகத்தின் பாவக் குழியில் விழாமல் காக்கும் தரும காரியமாகும். நாம் செய்த தருமமானது நம்மை தவறான வழியில் போகவிடாமல் தடுத்து, பாவத்தைச் செய்யவிடாமல் தடுத்துக் காத்தருளும்.


''தானமும் தவமும் தான் செய்வாராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே.'
' என்பது ஔவையின் அமுத வாக்கு. ''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்று மணிமேகலை கூறுகிறது. உணவு இல்லையேல் உயிர் வாழாது. உலகிலுள்ள பல நோயைப் பலகாலம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பசி எனும் நோய் மிகவும் கொடூரமானது. பசி அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு.
''மானம் குலம் கல்வி வண்மை பொருளுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனில்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் !'' என்று தமிழ் மூதாட்டி அருமையாகப் பசியின் கடுமையை விவரிக்கிறார்.



''அற்றார் அழி பசிதீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.''


ஒருவன் பெரிய தனவந்தனாக இருக்கிறான் அவனைப் பார்த்து ''கொடுத்து வைத்தவன் சுகமாய் வாழ்கிறான்'' என்கிறோம் அல்லவா ? அது இதுதான் முற்பிறவியில் வறியவர்களுக்கு பொன்னும், பொருளும் மேலாக அன்னமும் கொடுத்து வைத்ததினால் இப்பிறவியில் கோடீஸ்வரனாக வாழ்கிறான்.



''மண்ணார் சட்டி கரத்தேந்தி
மறநாய் கவ்வும் காலினராய்
அண்ணாந் தேங்கி இருப்பவரை
அறிந்தோம் சிலரை அம்மம்மா !
பண்ணார் மொழியார் பாலடிசில்
பைம் பொன்கலத்தில் இனிதுஊட்ட
உண்ணாதிருந்த பொழுது ஒருவருக்கு
உதவா மாந்தர் இவர்தாமே.''


இந்தப் பாடலைப் பலமுறை படியுங்கள். பசிக்கு வந்த வறியவர்க்கு உதவாதவன் மறுபிறப்பில், பசி நோய் வாட்ட வீடுதோறும் சென்று பிச்சை எடுத்து அலைவான் என்று உணர்க. இந்தப் பாடல் என்ன சொல்கிறதென்றால், உடைந்த மண் ஓட்டைக் கையில் ஏந்திக் கொண்டு, புண் உள்ள காலை மேலும் நாய்கள் சுற்றி சுற்றி வந்து கடித்தவாறு பின் தொடர, அம்மா !அம்மா! என்று கூவி ஒருவன் பிச்சை எடுக்கிறானே அவன் யார் தெரியுமா ? மாடி வீட்டில் ஏர்கண்டிஷன் அறையில் பட்டு மெத்தையிட்ட ஆசனத்தில் அமர்ந்து, அன்பும், அழகும் உள்ள மனைவி தங்கக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டும் போது, வெளியே நிற்கும் பிச்சைக்காரனைப் பார்த்து காவலாளியை அழைத்து அந்தப் பிச்சைக்காரனை அடித்து விரட்டு என்று சொன்னானே அவன்தான் இவன்.


ஒரு ஞானிக்கு தினையளவு உணவு தந்தாலும், மலையளவு புண்ணியம் கிட்டும். ஆனால், ஞானி என்பதை எவ்வாறு கண்டு கொள்வது ? வந்தவர்க்கெல்லாம் ஒரு கவளம் உணவு வழங்கினால், ஒரு நாளைக்கு ஒரு ஞானியாவது வருவார்.







அன்னதானம் செய்த சிறுதொண்டநாயனாரின் இல்லம் தேடி சிவபெருமானே உணவு உண்ணப் போனார்.


அன்னதானம் செய்து வறியவராய்ப் போன இளையான்குடி மாறன் நாயனாரைத் தேடி நடுஇரவில் பரமசிவமே பசி என்று போய் அவரை ஆட்கொண்டருளினார்.
ஈயாது இரும்புப் பெட்டியில் வைத்தது நமக்கு உதவாது. வயலில் இட்ட நெல் ஒன்றுக்கு நூறாய் விளைவதைப் போல ஏழைகளுக்கு இட்டது ஆயிரம் மடங்காய் பெருகி வந்து உதவும்.
ஒருவருக்கு வேட்டி கொடுத்தால் முழம் அளந்து பார்த்து, நீளங்காணாது என்பான். பணமாக ஆயிரம் கொடுத்தால், மேலும் வழிச் செலவுக்குத் தாருங்கள் என்பான். ஆனால் இலை விரித்து, இலை நிறைய அன்னமிட்டு உதவினால் வயுறு நிறைய, மனங்குளிர போதும் போதும் என்று சொல்லி வாழ்த்துவான். அதனால் அவன் ஊன் குளிர்கிறது, உள்ளம் குளிர்கிறது, உயிர் குளிர்கிறது எனவே உயிருக்கு உயிரான சிவமும் குளிர்கிறது. ஆகவே அன்னதானம் எவ்வளவு சிறந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.









அன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை.
அன்னதானத்தைப் பற்றி “நீங்கள்அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள்.


உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.
கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே.
ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள்.
உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான்.
அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது”
- என்றார் பகவான்

பசியோடிருக்கும் ஒருவனுக்கு நிறைய , அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் -போதும் என்று சோல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்குப் மீண்டும் பசிக்கவே செய்யும்.
பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.
அதனால்தான் ஔவையார்

“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. “ - என்றார்.

நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே. வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது. அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம்.

ஆதலால் நண்பர்களே, அன்னதானம் செயவதை நம் வாழ்வின் கடமையாக ஏற்போம். நம்மால் முடிந்த அளவுக்குப் பசிப்பிணியாற்றுவோம்.

எல்லாம் சரிதான் நம்ம கதையே கந்தலாகிக் கிடக்கிறது. இதில் தானம் செய்ய முடியுமா ? என்று கேட்டால், ஒன்று சொல்கிறேன். உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும்.

நன்றி : திரு. ராம் மனோகர்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3