Tuesday, July 18, 2017

பிறப்பால் எவரும் பிராமணர் ஆகமுடியாது.


சித்தர்கள் The Ascended Masters

பிறப்பால் எவரும் பிராமணர் ஆகமுடியாது. பூணூலை நமது தர்மங்களில் அனைவரும் அணியலாம். ஆனால் யாரும் தற்காலத்தில் அணிவதில்லை. திருமணம், சிரார்த்தம் முதலியன செய்யும் நேரத்தில் மட்டுமே அணிந்து பின்னர் கழட்டி விடுகின்றனர். இது மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல யோகம் சார்ந்த விஷயம். இது தி.க காரர்களுக்கு புரியாது. நமது மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற கேவலமான செயல் செய்து வருகிறார்கள். நமது மதம் இவர்களை போன்ற பலரை பல ஆயிரம் ஆண்டுகளாக வென்று வந்திருக்கிறது. இனியும் வெல்லும் .

தமிழாசான்கள் திருவள்ளுவர், ஒளவையார், அகத்தியர், சிவவாக்கியர், திருமூலர், போகர், வள்ளலார் மற்றும் எண்ணற்ற தமிழ்ச் சித்தர்களும் ஞானிகளும் சாதியில்லை என்றுதானே சொல்லியுள்ளார்கள். யாரோ வகுத்த சாதியைத் தலையில் தூக்கி வைத்து தமிழா நீ ஆடுவதேன்..?! அழிவதுமேன்..?! இது தமிழுக்கே இழுக்கன்றோ..?!

"சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு"

-ஆசான் கொங்கணச்சித்தர்

”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!”

-ஆசான் வள்ளலார்

"சாதியாவது ஏதடா?
சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ,
பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளி, காரை, கம்வி,
பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற
தன்மைஎன்ன தன்மையோ?"

-ஆசான் சிவவாக்கியார்

"சாதி இரண்டொழிய
வேறில்லை
இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"

-ஆசான் ஔவையார்

பிறப்பால் எவரும் பிராமணர் ஆகமுடியாது. 

எவ்வுயிரையும் தன்னுயிர் போலப் போற்றி, தன் எண்ணம், தான் செய்கின்ற செயல் எதிலும் அறவழியைக் கடைப்பிடைத்து, இறையை அடைந்த ஞானிகள் / சித்தர்களே மெஞ்ஞான அந்தணர் ஆவர். இன்று மனிதரில் சிறு கூட்டம் பிற மனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறிச் சில வேத, ஆகமங்களைப் பொருளுணராது கற்றுத் தம்மைத் தாமே அந்தணர் என்றும், உயர்குலத்தோர் என்றும் பொய்யுரைக்கின்றனர். இவர்கள் முத்திநெறி அறவே அறியாத மூர்க்கர் கூட்டம் ஆகும். இவர்கள் சொல்லும், செயலும் படுபாதகம் ஆகும்.

"பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப்
பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப்
பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி
தெரிந்து உரைத்தானே."

- ஆசான் திருமூலர் -

தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர். இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள்.

இங்கு யாருமே பிராமணர் கிடையாது. பிறப்பால் யாரும் பிராமணர் ஆகமுடியாது

"சத்தியம் இன்றித்
தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும்
உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப்
பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர்
பிராமணர் தாம்அன்றே. "

-ஆசான் திருமூலர்-

சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது.

பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."

-ஆசான் திருமூலர்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 

-ஆசான் திருவள்ளுவர்

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு அறவழி வாழ்பவர் எவரோ, அவரே அந்தணர்.

யாரையும் நோகடிப்பதல்ல எமது நோக்கம். தமிழர் வேதங்களான திருமந்திரம், திருக்குறள், திருவாசகம், திருவருட்பா போன்ற எண்ணற்ற தமிழ்மறை நூல்களில் மனிதரில் எந்தவிதப் பிரிவினையும் பிறப்பால் இருப்பதாக இல்லை. உண்மையை உரக்கச் சொல்வதே நம் பணி.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" 

- ஆசான் திருமூலர்.

வேற்றுமையை ஒழிப்போம்!
ஒற்றுமையை வளர்ப்போம்!

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.'

- ஆசான் திருமூலர்.

ஆசான் திருமூலர் திருவடிகள் போற்றி.


இந்த தி.க.காரங்களுக்கு புத்தி ஏன் இப்படி போகுது?

நமது மதத்தை மட்டும் அசிங்கப்படுத்தும் இவர்கள், அதே பன்றிக்கு தலையில் தொப்பியும், கழுத்தில் சிலுவையும் போடும் ஆண்மை உள்ளவர்களா..?!

மனது மிகவும் வலிக்கிறது...

அனைத்து மதத்தினரும் சேர்ந்து நம் கண்டனத்தைத் தெரிவிப்போம்.!

நன்றி.

-Nàthàn கண்ணன் Suryà
சித்தர் அறிவியல் Wisdom of Siththars

No comments:

Post a Comment