Monday, July 3, 2017

இறையிடம் எதைக் கேட்க வேண்டும்..?!

சித்தர்கள் The Ascended Masters

அது வேண்டும், இது வேண்டும் என இறையிடம் வேண்டுவோர் அரிதான பிறப்பான மனிதப்பிறப்பின் பயனை வேண்டுவதில்லையே என வருந்துகின்றனர் முற்றுப்பெற்ற ஞானிகள்.

"பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்"
- காரைக்கால் அம்மையார்

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்."

- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

ஒருவர் ஒன்றை விரும்புவதனால் பிறவாநிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படாமலிருக்கப் பேரறிவான மற்றும் பேரின்பமான "பிறவாமை"யை நாம் இறையிடம் வேண்டுவோம்.

எனவே கிடைத்த இந்தப் பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார் ஆசான் திருவள்ளுவர் மற்றும் ஆசான் திருமூலர் பெருமான். இதையே முற்றுப்பெற்ற சித்தர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.

இறையிடம் நாம் மறக்காமல் கேட்க வேண்டியது மீண்டும் மீண்டும் பிறவாமை எனும் பெரும்பேற்றை . கேட்காமற் கிடைக்காது. கேட்டுப் பெறுவோம் பிறவிப்பயனை.

“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”

- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

ஓம் எண்ணிலாக்கோடி சித்த, ரிஷி, கணங்கள் திருவடிகள் போற்றி

நன்றி! ❤️
-கண்ணன் Suryà
22/02/2014

சித்தர் அறிவியல் Wisdom of Siththars

No comments:

Post a Comment