Friday, July 14, 2017

அகத்தியரின் காலமெது..?! போகர் பாடல்

அகத்தியரின் காலமெது..?! சித்தர்பெருமகனார் போகர் பாடல்
சித்தர்கள் The Ascended Masters

வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு அகத்தியர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றனர். 86 அகத்தியர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளதால், அவர்கள் வெவ்வேறானவர்களே என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இதற்கு சித்தர்கள் யுகங்கள் பல தாண்டி, மரமிணமிலாப் பெருவாழ்வு பெற்று இன்றும் வாழ்பவர்கள் என்பதை இன்றைய விஞ்ஞான அறிவின் மூலம் அறிந்து கொள்ள முடியாமையே காரணமாகும்.

இன்னும் சிலர் 14ம் நூற்றாண்டிலும், 16ம் நூற்றாண்டிலும் தோன்றியவர்கள் தான் தமிழ்ச்சித்தர்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அறிவுக்கு எட்டியவைகளைக் கூறுகின்றனர்.

குருமுனியென்றும் கும்பமுனியென்றும் அழைக்கப்படும் ஆசான் அகத்தியரின் வயதைப் பற்றி ஆசான் போகர் சொல்வதைக் கீழ்க்காணும் பாடலில் காணலாம்.

"பகருவேன் அகத்தியருக்கு வயது ஏதென்றால்
... பட்சமுடன் துகை கணக்கு கூறொண்ணாது
நிகரமுடன் சொல்வதற்கு யாராலாகும்
... நீதியுடன் நூல்களில் உரைத்த மார்க்கம்
அகரமென்ற அட்சரமும் அவரால் ஆச்சு
... அப்பனே நாலுயுகம் கடந்த சித்து
சகரமெல்லாம் தான் துதிக்கம் கும்பயோனி
... சதுரான அகத்தியர் என்று அறையலாமே"

-போகர் சப்தகாண்டம் 57:57

மேற்கண்ட கவிமூலம் முதல் நான்கு வரிகளில் அகத்தியரின் துகை, கணக்கு என்று யாராலும் சொல்ல முடியாது என்று கூறுகிறார் ஆசான் போகர்.

எழுத்துக்களின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறார் என்றும், எண்ணிலா நான்கு யுகங்கள் பல கடந்தும் வாழும் சிததரே ஆசான் அகத்தியர்.

சித்தர்கள் இன்றும் உண்மையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வி அறிவியலாளர் மத்தியில் எழுவது இயல்பு. இதைப்பற்றி ஆசான் கொங்கணச் சித்தர் என்ன சொல்கிறார் என்பதை பிறிதொரு பதிவிற் காண்போம்.

நன்றி
. . ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
 Aum Muruga ஓம் மு௫கா 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 









No comments:

Post a Comment