Friday, September 22, 2017

சாகாதவனே சன்மார்க்கி!



சாகாதவனே சன்மார்க்கி!
சாகாதவனே சற்குரு!
சாகாதவனே முற்றுப்பெற்ற சித்தன்!

உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்
-ஆசான் சிவவாக்கியர்

இடது, வலது மூச்சுத் (மூக்கு) துவாரங்கள் ஊடாக ஓடும் காற்றை(வாயுவை) கபாலத்திலுள்ள சுழிமுனையில் (உருத்தரித்த நாடி) ஓடுங்கினால், வயோதிபரும்(விருத்தர்) பாலகராக மாறி, மேனியும் பளபளப்பாக ஒளிதேகம் பெற்று சிவந்திடும்.

வயது முதிர்ந்த கிழவரும் ஞானபண்டிதனான முருகப்பெருமான் துணைகொண்டு சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை சுழிமுனையாகிய 'உருத்தரித்த நாடி'யில் ரேசித்துப் பூரித்துக் கும்பித்து நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என்கிறார் ஆசான் சிவவாக்கியர். இவ்வாறு நம் உடலாகிய ஆலயத்தைப் பற்றி சித்தர்கள் கண்ட பல உண்மைகள் இன்னும் ஆராயப்படாமல் காத்துக் கிடக்கின்றன.

முருகப்பெருமானே இவ்வுலகில் முதன்முறையாக ஞானம் அடைந்தவர். 9 கோடி ஞானியர்க்கும் ஞானம் அதாவது மரணமில்லா பெருவாழ்வு அளித்தவர். முருகப்பெருமானையும் அவர்வழி வந்த முற்றுப்பெற்ற சித்தபெருமக்களையும் போற்றி, அவர்கள் அளித்த உபதேசங்களைக் கடைப்பிடித்தால் பெறுதற்கரிய மானிடப்பிறப்பைப் பெற்றவர் பிறவிப்பிணியை வென்று மரணமிலாப் பெருவாழ்வு பெற்று இறையுடன் இரண்டறக் கலந்து இறைபதமடையலாம்.

ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா


சித்தர் அறிவியல் Wisdom of Siththars


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3



Thursday, September 21, 2017

அன்னதானம் ஏன் முதன்மையான தானமாக உள்ளது..?!



முருகன் ஆசி பெறபெற நமது தேகம் ஐந்து வகை இயல்பினால் ஆக்கப்பட்டு தொடர்நிலையாய் உள்ளதை அறியலாம். நமது தேகம் அன்னமாகிய உணவினால் ஆக்கப்பட்டு உணவு உண்டவுடன் அதன் அடுத்தநிலையாம் பிராணமயமான ஆன்ம இயக்கத்தினில் சென்று மனோன்மயமான மனஇயக்கத்தினை தூண்டி விஞ்ஞான மயமான அறிவினை எழுப்பி செயல்பட செய்து அந்த அறிவின் செயல்பாட்டால் ஆனந்தமயமான இன்பதுன்பங்களை செயல் விளைவால் ஏற்பட செய்து மனிதனுக்கும் உயிர்களுக்கும் பலவித விளைவுகளை ஏற்படுத்தி பாவபுண்ணியங்களுக்கு ஆட்படுத்தி செயல்பட செய்கிறது. ஆதலின் உயிர் இயக்கத்தின் அடிப்படை மூலமாக உள்ளது. இந்த அன்னமய கோசமான உணவினால் ஆன பருதேகமேயாம்.
https://www.facebook.com/groups/ongarakudil
ஆதலின் தேகஇயக்கத்திற்கு காரணமான அன்னம் அளித்தலே முதன்மை தானம் என்ற உணர்வு வரும். முருகா என்றால் தானங்களில் பிரதானமான தானம் அன்னதானமே என்று உணரலாம். அன்னதானமே ஜீவதயவினை தந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறியலாம்.

ஆன்ம இயக்கம் பசி உணர்வாக மாறியே நமது தேகத்தினை சார்ந்து அந்த உயிர் தாங்கும் உடலினை வளர்க்க கருணை மிகுந்துமே பசி உணர்வாக மாறி தாயாக தோன்றி உடல் வளர்க்க உதவுகிறான். பசி உணர்வு தாயாக உள்ளவரை நமக்கு துன்பமில்லை.

அதுவே பசி அதிகரிக்க அதிகரிக்க அந்த தாய் கோபமுற்று அதிதீவிர நிலையடைந்து தேகம் காத்திட காளிபோல மாறிவிடுவாள், தாய் காளியாக மாறாது காத்திடவே அந்த இயற்கையே உணவாக உணவெனும் வளர்ப்பு தாயாக அவளே மாறி அவள் தோற்றுவித்த அந்த அற்புத தேகங்களை அவளே காக்கிறாள். உணவு உண்ட தேகம் உணவினுள் உள்ளவற்றை கிரகித்து சத்து அசத்தாக மாற்றி உடலிற்கு இன்பமளித்து பசி நிறை இன்பமாக மாறி நிறைவை தந்து ஆன்மாவை குளிரச்செய்து துன்புறும் தேகத்தையும் குளிரச்செய்து உடல் இயக்க சக்தியையும் அளித்து முடங்கிய தேகத்தை விழிப்புற செய்து அதன் உள்ளே உள்ள சோர்ந்த ஆன்மாவை தூண்டி ஆன்ம இயக்கத்தை தூண்டி ஆன்ம வெளிப்பாடாம் அறிவின் இயக்கத்தை தூண்டி அறிவை செயல்பட செய்து செயல்களை செய்து பாவபுண்ணியங்களை செய்திடத் தூண்டுகிறது.

இவ்விதம் உணவினால் தூண்டப்படும் அறிவு அவரவர் செய்திட்ட கர்மவினைகளுக்கு ஏற்பவே உண்கின்ற உணவின் சாராம்சத்தின் சத்து அசத்திற்கேற்ப செயல்படும்.
https://www.facebook.com/groups/ongarakudil
ஆதலின் அசைவ உணவுகளை தவிர்த்து சாத்வீகமான சைவஉணவை மேற்க்கொள்ள மென்மையான அறிவு மிகுந்து காணும். அறிவு செயல்பட துவங்கினாலும் கர்ம வினைவழி செல்வதால் செல்லும் அறிவினை தூண்டப்பட்ட அறிவினை நம் அறிவாய் கொள்ளாது செம்பொருள் அறிவை பெற்றோனாம் தூய சுயம் பிரகாச சோதி சொரூபனும் ஞானத்தலைவனுமாகிய முருகப்பெருமானை முருகா! முருகா! சரவணபவனே! சண்முகா! செந்தில்நாதா! சிங்காரவேலா! என்றே பலவாறாய் கூவி அழைத்து அழைத்து அவர்தம் கடைத்தேற்றவல்ல செம்பொற்பாத மலர் கமலங்களிலே தம்மையும் தமது உயிரையும், அறிவையும், முழுச்சரணாகதியாக ஒப்புவித்து அவர்தம் திருவடிக்கு சரணாகதியாக ஆகி விட்டால் முருகனருளால், பிற உயிர்களின் பசி போக்கிட அன்னமளித்து பசித்தாயின் துன்பம் போக்கிட உதவி செய்திட்டால் அந்த உபகாரம் உபகாரம் செய்கின்றவனை சார்ந்து புண்ணிய செயலாக மாறி ஆசான் அருளால் அப்புண்ணியம் மிகுந்து அறிவைச் சார்ந்து அறிவு தெளிவடைந்து இது புண்ணியம் தரும் செயல் என்றே அவனை உணரச் செய்து அந்த அற்புத உபகாரம்தனை தவறவிடாது தொடர்ந்து செய்திடச் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்ள வேண்டுமென்ற உண்மை அறிவை ஊட்டும்.

ஆதலின் பசித்த ஒருவனுக்கு உணவளிக்க அது இயற்கை அன்னையின் பிள்ளைக்கு உணவளித்ததாகும். பசி உணர்வாய் நம்முள்ளே இருந்து உடல் வளர்க்கும் இயற்கை தாய் பசி மிகுந்து காளிபோல மாறி உடலை வருத்தும் முன் அந்த தாயின் துன்பம் போக்கி தாய் தாயாகவே இருக்கும்படி செய்கின்ற பசி போக்கும் உபகாரம் எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அதே இயற்கை காளியாக மாறி நம்மை அழிக்கின்றதையும் செய்யும் காலத்து நாம் செய்த உபகாரம் காளியான இயற்கையின் அழிவின் செயலை தடுத்து காத்து நம்மை இயற்கையன்னையை தாயாகவே நம்முள் இருந்திட செய்து நம்மை மரணத்தின் பிடியிலிருந்து விடுபடவும் செய்திடும்படியான அளவிடற்கரிய பெருஞ்செயலை தரும். இயற்கை தோற்றுவித்த பிற உயிர்கள் பால் காட்டும் ஜீவதயவே நமக்கு ஞானமளிக்கும்.

இவற்றையெல்லாம் அறிய ஆதிமூல ஞானத்தலைவனாம் ஞானபண்டிதனாம் முருகப்பெருமான் துணையினாலன்றி அவனருளின்றி சிந்திக்கவோ, சிந்தித்து தெளியவோ, அறியவோ, அறிந்து கடைப்பிடிக்கவோ, கடைப்பிடித்து தேறவோ கண்டிப்பாக இயலாது என்ற சிறப்பறிவும் பெறுவார்கள்.

முருக நாமம் ஜெபியுங்கள் முக்தி வழிதனை முருகனருளால் உணருங்கள்.

அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
https://www.facebook.com/groups/ongarakudil

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Saturday, September 16, 2017

அகத்தியம்



#அகத்தியம்: ஆசான் #அகத்தியர்

அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. ஆசான் அகத்தியர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன . இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.

ஆசான் அகத்தியரின் மாணவர்கள்:

செம்பூண்சேய்
வையாபிகன்
அதங்கோட்டாசான்
அபிநயனன்
காக்கை பாடினி
தொல்காப்பியர்
பனம்பாரனார்
கழாகரம்பர்
நத்தத்தன்
வாமனன்
துராலிங்கன்


மற்றும் எண்ணிலிச் சித்தபெருமக்கள் அவருடைய சீடர்களாக உள்ளனர். எதிர்காலத்திலும் இன்னும் பலர் சீடராவர். அகத்தீசரே ஞானபண்டிதரான முருகப்பெருமானின் முதற் சீடராவர்

ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி
. . ஓங்காரக்குடில் Ongarakudil


சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

 

சிவலிங்கம் ..!


அம்மை அப்பனின் வடிவம் சிவலிங்கம் ..!

"இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்

இலிங்கம தாக எடுத்தது உலகே"

-ஆசான் திருமூலர்-

சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது.

தமிழ்ச்சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டது.

இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை) வடிவமே.

இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே.

மனிதர் மட்டுமல்ல இந்த அண்டமே சிவலிங்க வடிவே. ஆண் - பெண் சேர்க்கை மட்டுமல்ல. மழைத்துளி மண்ணைச் சேர்தலும் இலிங்க வடிவே. எல்லா ஆக்கமும் அழிவும் இலிங்க வடிவே. இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை) வடிவமே. இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே.

சிவமும், சக்தியும், நாதமும், விந்துவும் கலந்து சிவசக்தி, நாதவிந்தாகப் படைப்புக்கள் நடைபெறுகின்றன.

இந்த அண்டங்கள் எல்லாம் சிவசக்தியின் வடிவாதலால் அதனை (Universe is in the form of Energy) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள்.

சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால், ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள்.

மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.

ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவவமாகிய ஓம் எனும் ஓங்காரத்தில் அகரம் சிவம், உகரம் சக்தி, மகரம் மலம், நாதம் மாயை, விந்து உயிர் ஆகும்.

இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கையைக் குறிக்கும்.

"மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே"

-ஆசான் திருமூலர்-
- திருமந்திரம் -
-பிண்டலிங்கம் - கவி எண் 1726.

மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே
சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும்
திருக்கூத்துமாகவும் உள்ளது.

இதில் திருக்கூத்து என்பது சுழிமுனைக்கதவு திறந்தபின் புருவமத்தியாகிய சுழிமுனையில் சந்திர ஒளி, சூரிய ஒளி, வன்னியாகிய அக்னிஒளி முச்சுடர்களும் மாறிமாறி இயங்கும்.

இதுவே திருநடனம் அல்லது திருக்கூத்து எனப்படும்.

இவ்வரிய வாய்ப்பு மனிதருக்கு இருந்தபோதிலும் புண்ணியபலமும், குருவருளும், இறையருளும் இல்லாததால் மனிதர்கள் இந்த வாய்ப்பை அடையமுடியவில்லை.

"பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே."

- திருமந்திரம் -
-கேடு கண்டிரங்கல் - கவி எண் 2090.
. . ஓங்காரக்குடில் Ongarakudil




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Thursday, September 14, 2017

நீங்கள் யார்..??!!


இதில் நீங்கள் யார்..??!!


1. மரணத்தை வெல்லவே, மனிதன் பிறக்கிறான் என்ற உண்மை அறியாதவர்.
2. இந்த உண்மை அறிந்து மரணத்தை வென்ற மனிதர்களே “கடவுள்” என்றறியாதவர்.
3. ஆசான் முருகப்பெருமான் மதம் சார்ந்த கடவுள் என நினைத்து ஏமார்ந்தவர்.
4. கடவுளை வணங்குவதே நாம் கடவுள்தன்மை பெறுவதற்கு என்றறியாதவர்.
5. இந்த உண்மை அறிந்தும் பணத்தை மட்டும் தேடி இறந்துபோகின்றவர்.
6. அப்படி இறந்தால் மீண்டும் பிறந்தாகவேண்டும் என்ற உண்மை அறியாதவர்.
7. நம் உடம்பில் உள்ள உயிரே, படைத்த இயற்கை (சிவன்) என்று அறியாதவர்.
8. இயற்கை அன்னையை (சிவன்) யாராலும் வணங்க முடியாது என்று அறியாதவர்.
9. இயற்கை அன்னை (சிவன்) ஒரு இயக்கம் என்று அறியாதவர்.
10. ஒரு குழந்தை துடிதுடித்து இறப்பதும், பாவத்தின் கழிவிடை என்று அறியாதவர்.
11. நாம் அனுபவிக்கும் வலி, நம் பாவத்தின் கழிவிடை என்று உணராதவர்.
12. புண்ணியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்.
13. பணம் வருவது புண்ணியம் என்றும், அது சேருவது பாவம் என்றறியாதவர்.
14. சேரும் பணம் மற்றும் நகை அடுத்த பிறவியின் அதிக வறுமை என்றறியாதவர்.
15. ஒரு துண்டு கறிசோறு (non-veg) ஓராயிரம் துன்பம் தரும் என்று அறியாதவர்.
16. மேற்கண்டவை உண்மையா என அறிய, கடவுள் (ஞானிகள்) திருவடி துணைவேண்டும் என்ற உண்மை அறியாதவர்.

“ஓம் சர்வலோக சித்தர்கள் திருவடிகள் போற்றி”

ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர்கள் The Ascended Masters.

Aum Muruga ஓம் மு௫கா


சித்தர் அறிவியல் 




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

Tuesday, September 12, 2017

போற்றினால் உனது வினை அகலுமப்பா

"போற்றினால் உனது 
வினை அகலுமப்பா
பூதலத்தில் நீயும் 
ஓர் சித்தனாவாய்"

https://www.facebook.com/groups/siddhar.science


காடு, புனிதத்தலங்கள், தீர்த்தம் என எங்கும் அலைய வேண்டாம். முருகப்பெருமானையும் அவர்தம் சீடரான முற்றுப்பெற்ற சித்தர்களைப் போற்றினால் போதும், நீங்களும் சித்தராகலாம். பிறவிப்பிணி நீக்கி, இறையுடன் இரண்டறக்கலந்து முற்றுப்பெறலாம்

குருமுனி, கும்பமுனி, கலசமுனி
பேராசான் அகத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் அகத்தீசாய நம 

ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdom of Siththars


முருகப்பெருமானால் வகுத்தருளப்பட்ட
131 சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்ய முருகப்பெருமானால் வகுத்தருளப்பட்ட 131 சித்தர்கள் போற்றித்தொகுப்பு



அகத்தியர் துணை

ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

ஓங்காரக்குடில் Ongarakudil
 Aum Muruga ஓம் முருகா 



சித்தர் அறிவியல் 




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||



|