Thursday, September 21, 2017

அன்னதானம் ஏன் முதன்மையான தானமாக உள்ளது..?!



முருகன் ஆசி பெறபெற நமது தேகம் ஐந்து வகை இயல்பினால் ஆக்கப்பட்டு தொடர்நிலையாய் உள்ளதை அறியலாம். நமது தேகம் அன்னமாகிய உணவினால் ஆக்கப்பட்டு உணவு உண்டவுடன் அதன் அடுத்தநிலையாம் பிராணமயமான ஆன்ம இயக்கத்தினில் சென்று மனோன்மயமான மனஇயக்கத்தினை தூண்டி விஞ்ஞான மயமான அறிவினை எழுப்பி செயல்பட செய்து அந்த அறிவின் செயல்பாட்டால் ஆனந்தமயமான இன்பதுன்பங்களை செயல் விளைவால் ஏற்பட செய்து மனிதனுக்கும் உயிர்களுக்கும் பலவித விளைவுகளை ஏற்படுத்தி பாவபுண்ணியங்களுக்கு ஆட்படுத்தி செயல்பட செய்கிறது. ஆதலின் உயிர் இயக்கத்தின் அடிப்படை மூலமாக உள்ளது. இந்த அன்னமய கோசமான உணவினால் ஆன பருதேகமேயாம்.
https://www.facebook.com/groups/ongarakudil
ஆதலின் தேகஇயக்கத்திற்கு காரணமான அன்னம் அளித்தலே முதன்மை தானம் என்ற உணர்வு வரும். முருகா என்றால் தானங்களில் பிரதானமான தானம் அன்னதானமே என்று உணரலாம். அன்னதானமே ஜீவதயவினை தந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறியலாம்.

ஆன்ம இயக்கம் பசி உணர்வாக மாறியே நமது தேகத்தினை சார்ந்து அந்த உயிர் தாங்கும் உடலினை வளர்க்க கருணை மிகுந்துமே பசி உணர்வாக மாறி தாயாக தோன்றி உடல் வளர்க்க உதவுகிறான். பசி உணர்வு தாயாக உள்ளவரை நமக்கு துன்பமில்லை.

அதுவே பசி அதிகரிக்க அதிகரிக்க அந்த தாய் கோபமுற்று அதிதீவிர நிலையடைந்து தேகம் காத்திட காளிபோல மாறிவிடுவாள், தாய் காளியாக மாறாது காத்திடவே அந்த இயற்கையே உணவாக உணவெனும் வளர்ப்பு தாயாக அவளே மாறி அவள் தோற்றுவித்த அந்த அற்புத தேகங்களை அவளே காக்கிறாள். உணவு உண்ட தேகம் உணவினுள் உள்ளவற்றை கிரகித்து சத்து அசத்தாக மாற்றி உடலிற்கு இன்பமளித்து பசி நிறை இன்பமாக மாறி நிறைவை தந்து ஆன்மாவை குளிரச்செய்து துன்புறும் தேகத்தையும் குளிரச்செய்து உடல் இயக்க சக்தியையும் அளித்து முடங்கிய தேகத்தை விழிப்புற செய்து அதன் உள்ளே உள்ள சோர்ந்த ஆன்மாவை தூண்டி ஆன்ம இயக்கத்தை தூண்டி ஆன்ம வெளிப்பாடாம் அறிவின் இயக்கத்தை தூண்டி அறிவை செயல்பட செய்து செயல்களை செய்து பாவபுண்ணியங்களை செய்திடத் தூண்டுகிறது.

இவ்விதம் உணவினால் தூண்டப்படும் அறிவு அவரவர் செய்திட்ட கர்மவினைகளுக்கு ஏற்பவே உண்கின்ற உணவின் சாராம்சத்தின் சத்து அசத்திற்கேற்ப செயல்படும்.
https://www.facebook.com/groups/ongarakudil
ஆதலின் அசைவ உணவுகளை தவிர்த்து சாத்வீகமான சைவஉணவை மேற்க்கொள்ள மென்மையான அறிவு மிகுந்து காணும். அறிவு செயல்பட துவங்கினாலும் கர்ம வினைவழி செல்வதால் செல்லும் அறிவினை தூண்டப்பட்ட அறிவினை நம் அறிவாய் கொள்ளாது செம்பொருள் அறிவை பெற்றோனாம் தூய சுயம் பிரகாச சோதி சொரூபனும் ஞானத்தலைவனுமாகிய முருகப்பெருமானை முருகா! முருகா! சரவணபவனே! சண்முகா! செந்தில்நாதா! சிங்காரவேலா! என்றே பலவாறாய் கூவி அழைத்து அழைத்து அவர்தம் கடைத்தேற்றவல்ல செம்பொற்பாத மலர் கமலங்களிலே தம்மையும் தமது உயிரையும், அறிவையும், முழுச்சரணாகதியாக ஒப்புவித்து அவர்தம் திருவடிக்கு சரணாகதியாக ஆகி விட்டால் முருகனருளால், பிற உயிர்களின் பசி போக்கிட அன்னமளித்து பசித்தாயின் துன்பம் போக்கிட உதவி செய்திட்டால் அந்த உபகாரம் உபகாரம் செய்கின்றவனை சார்ந்து புண்ணிய செயலாக மாறி ஆசான் அருளால் அப்புண்ணியம் மிகுந்து அறிவைச் சார்ந்து அறிவு தெளிவடைந்து இது புண்ணியம் தரும் செயல் என்றே அவனை உணரச் செய்து அந்த அற்புத உபகாரம்தனை தவறவிடாது தொடர்ந்து செய்திடச் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்ள வேண்டுமென்ற உண்மை அறிவை ஊட்டும்.

ஆதலின் பசித்த ஒருவனுக்கு உணவளிக்க அது இயற்கை அன்னையின் பிள்ளைக்கு உணவளித்ததாகும். பசி உணர்வாய் நம்முள்ளே இருந்து உடல் வளர்க்கும் இயற்கை தாய் பசி மிகுந்து காளிபோல மாறி உடலை வருத்தும் முன் அந்த தாயின் துன்பம் போக்கி தாய் தாயாகவே இருக்கும்படி செய்கின்ற பசி போக்கும் உபகாரம் எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அதே இயற்கை காளியாக மாறி நம்மை அழிக்கின்றதையும் செய்யும் காலத்து நாம் செய்த உபகாரம் காளியான இயற்கையின் அழிவின் செயலை தடுத்து காத்து நம்மை இயற்கையன்னையை தாயாகவே நம்முள் இருந்திட செய்து நம்மை மரணத்தின் பிடியிலிருந்து விடுபடவும் செய்திடும்படியான அளவிடற்கரிய பெருஞ்செயலை தரும். இயற்கை தோற்றுவித்த பிற உயிர்கள் பால் காட்டும் ஜீவதயவே நமக்கு ஞானமளிக்கும்.

இவற்றையெல்லாம் அறிய ஆதிமூல ஞானத்தலைவனாம் ஞானபண்டிதனாம் முருகப்பெருமான் துணையினாலன்றி அவனருளின்றி சிந்திக்கவோ, சிந்தித்து தெளியவோ, அறியவோ, அறிந்து கடைப்பிடிக்கவோ, கடைப்பிடித்து தேறவோ கண்டிப்பாக இயலாது என்ற சிறப்பறிவும் பெறுவார்கள்.

முருக நாமம் ஜெபியுங்கள் முக்தி வழிதனை முருகனருளால் உணருங்கள்.

அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
https://www.facebook.com/groups/ongarakudil

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment