Tuesday, January 30, 2018

சென்னிமலை

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் ..சென்னிமலை !!!

வேறுபெயர்: சிரகிரி - சென்னி-சிரம், மலை-கிரி



சென்னிமலை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் 11.17°N 77.62°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 330 மீட்டர் (1082 அடி) உயரத்தில் இருக்கின்றது.

நவ 18 கந்தசஷ்டி

கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய தலம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்குள்ள முருகனை வணங்கினால் பிறந்த பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

தல வரலாறு:

நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் “பெரும்வெளிர்’ இனத்தவர் வாழ்ந்தனர். இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர். ஒரு காராம்பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை, ஒரு வேலையாள் கவனித்து பண்ணையாரிடம் கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில், மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு சிலை கிடைத்தது. அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப்போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். “”ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்”, என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு “தண்டாயுதபாணி’ என்ற திருப்பெயர் இட்டனர். .

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி மகிழ்வித்து முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்ற தலம்.
கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்: “”துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள் கந்தசஷ்டி கவசம் தனை”… என்று முருக பக்தர்கள் மனம் உருகி பாடும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். “சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக’ என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். தந்துள்ளார். “சிரம்’ , “சென்னி’ என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார்.

அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோயில்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,526 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னிமலை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

-நிஷா(2011)
https://www.facebook.com/groups/siddhar.science


    

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

No comments:

Post a Comment